அண்மையில் கொரோனா விதிமுறைகளை மீறி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் போரிஸ் ஜோன்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமன்றி அவருக்குச் சொந்தமான கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே இங்கிலாந்து பாராளுமன்றத்தின் கீழ் சபையில் பேசிய போரிஸ் ஜான்சன் விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என்று ஒப்புக்கொண்டிருந்தார். அதற்காக மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்தை மறுத்திருந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது பற்றி லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக மெட்ரோ போலிடன் காவல் ஆணையாளர் கூறுகையில் டவுன்ஸ்கிரிப்ட் பகுதியில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகள் பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். என்றனர்.
Leave a comment