Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய அரசியலமைப்பு வரைபு! – பணிகள் பூர்த்தி

Share

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைவொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் குழு அப் பணியை நிறைவு செய்துள்ளது.

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக் குழுவானது தனது வரைவினை இறுதி செய்துள்ளது.

இந்த வரைபில் அரசியல் கட்சிகளினால் முன்னொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் உள்ளடக்கத்தில் உள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த வரைவின் சில உள்ளடக்கங்கள் தொடர்பில் வரைவைத் தயாரிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு காணப்படாத போதும் அவையும் உள்ளீர்க்கப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குறித்த வரைவினை நிபுணர்கள் குழு வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இது வரையில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடுகள் எவையும் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இதேநேரம், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஏப்ரலில் புதிய அரசியலமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...