Deep sea Fishing Mirissa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணாமல் போன வல்வை மீனவர்கள் கண்டுபிடிப்பு!

Share

மீன் பிடிப்பதற்காக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்(21) காலை மீன்பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் (வயது 37), தவராசா சுதர்சன் (வயது 41) ஆகிய இருவரும் கடலுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் நேற்று(22) வரை கரை திரும்பாத நிலையில், குடும்பத்தாரால் பொலிஸ் நிலையத்திலும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது.

ஏற்கனவே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கும் இது குறித்த தகவல் வழங்கப்பட்ட நிலையில், மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் கரையிலிருந்து சென்ற மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரையில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் நிலைகொண்டுள்ள கடலின் தொலைவின்படி அவர்கள் இருவரும் கரை திரும்ப எட்டு மணிநேரம் ஆகலாம் என்று தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...