கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சுழிபுரம் பறாளை பகுதியில் உள்ள வீட்டு வளாகத்திலிருந்து மூன்று உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 85 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment