நிதி நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பான நிலைப்பாட்டை பெப்ரவரி மாதத்துக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதைவிட உள்ள சிறந்த மாற்றுவழி என்னவென்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளித்து, உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கி பொருளாதாரத்தை ஜனாதிபதி மேம்படுத்துவார் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதன்போது தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment