இலங்கையில் வாழ்ந்ததாக கூறப்படும் காண்டாமிருகக் கூட்டத்தின் மண்டையோடுகள் உள்ளிட்ட எலும்புத்துண்டுகள் மடுல்சீமை மற்றும் ரிலவுலு மலையடிவாரத்தில் லுணுகல வயல்வெளியில் இருந்து 80 அடிக்கு கீழே மாணிக்கக்கல் சுரங்கத்தில் புதைக்கப்பட்டதாக தொல்பொருள் பட்டதாரி நிறுவனத்தின் விலங்கியல் நிபுணர் கெலும் நலிந்த மனமேந்திர ஆராச்சி கூறுகிறார்.
சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட விண்கல் மழையினால் காண்டாமிருகக் கூட்டம் அழிந்ததாக கூறப்படுகின்றது.
1996 இல் சுரங்கத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பெரிய விலங்கு மண்டை ஓடுகள், எலும்பு படிவங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் சோதனை நடத்தினர்.
அதில் ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தில் வாழ்ந்த காண்டாமிருக மந்தையின் மண்டை ஓடுகள் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் இவ்வாறான தொன்மையான விலங்கினங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்று 26 வருடங்கள் கடந்துள்ளது.
இதுவரை அனைத்தையும் மீட்பதற்கு உரிய அதிகாரிகள் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
#SrilankaNews
Leave a comment