செய்திகள்
பட்டினிச் சாவில் ஆப்கான் மக்கள்: என்ன செய்யப்போகிறது சர்வதேசம்!
ஆப்கானிஸ்தானில் 8.7 மில்லியன் மக்கள் பட்டியினால் தவித்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆண்டு ஓக்ஸ்ட் மாதம் கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் அமுல்படுத்தி வருகின்றனர்.
இதனால், சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்புகளில் 7 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.
ஆகவே கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆப்கான் மக்கள் பசியால் வாடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் 8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டினியில் உள்ளனர் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக் வேண்டுமென, தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login