இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில், குறித்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டுபாயிலிருந்து 5 நிமிட இடைவெளியில் இந்தியாவுக்கு புறப்பட இரண்டு விமானங்கள் தயாராக இருந்துள்ளன. குறித்த இரண்டு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதையே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை முற்காட்டியே அறிந்த விமான நிலைய அதிகாரிகள் சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு விமானத்தின் பயணத்தை தாமதிக்குமாறு அறிவித்த நிலையில் குறித்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
#worldnews
Leave a comment