Basil Rajapaksa 1
இலங்கைஅரசியல்செய்திகள்

செலவினங்களைக் குறைக்க அரசு நடவடிக்கை!!

Share

அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ச கேட்டுக் கொண்டுள்ளார்.

அது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் செலவுகளை முகாமைத்துவப்படுத்தும் மட்டுப்படுத்தல்களுக்கு மேலதிகமாக இவ்வாறு அரச நிறுவனங்களின் செலவுகளை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அதன்மூலம் நிதியமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கவனத்திற்கொண்டு செலவினங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைப் பத்திரம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கடந்த வருடமும் அரசின் செலவினங்கள், வீண்விரயங்கள் குறைக்கப்பட்டு பல கோடி ரூபா சேமிக்கப்பட்டது தெரிந்ததே. ஜனாதிபதியும் தனது செலவினங்களை குறைத்திருந்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...