Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
செய்திகள்அரசியல்இலங்கை

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Share

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாராளுமன்றத்தில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தவுள்ள நிலையில் அதன் மீதான இரண்டு நாள் விவாதத்தை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்லவும் சபாநாயகரிடம் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் பெற்றுத் தருமாறு சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மேற்படி விடயத்துக்கு மேலதிகமாக முக்கியமாக சில விடயங்கள் இந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...