Sajith Premadasa
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு தலைமை வகிக்க தயார்! – யாழில் சஜித் உறுதி

Share

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமன சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுக்கொள்கையுடன் செயற்பட எந்த கட்சியும் முன்வரலாம். தற்போதைய ஐனாதிபதி போராட்ட அரசியலையே மேற்கொண்டு வருகிறார். நான் பெளத்தனாகவுள்ளேன். ஆனால் மத வேறுபாடு இனவேறுபாடு காட்டாமல் எல்லோரையும் இலங்கையர்களாகவே பார்க்கவேண்டும். இதனையே ஐனாதிபதியும் செய்யவேண்டும்.

நமது ஆட்சியில் வீட்டுத் திட்டங்களை வழங்கியிருந்தோம். ஆனாலும் கூட தற்போது வந்த அரசாங்கம் அந்த வீட்டு திட்டங்களுக்கான நிதிகளை வழங்காமல் மக்களிடம் விளையாட்டுக்களைக் காட்டி வருகின்றது.

வடக்கு கிழக்கு சார்ந்த பகுதிகளில் சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக நாங்கள் வந்து இருக்கின்றோம், அந்த வகையில் இன்று நாம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை சந்திக்கின்றோம் இது மிகவும் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது நாட்டில் ஊடகத்துறைக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றது.

ஆளும் தரப்பின் அமைச்சர்கள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வெளியே விடப்படும் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாற்று சக்தியாக உருவாகுவதற்கு சாத்தியமில்லை.

மைத்திரிபால சிறிசேன தற்போது வரை பொதுஜன பெரமுனவில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நபர். அவ்வாறான ஒருவர் எதிர்த்தரப்பின் பொது வேட்பாளராக வருவதற்கு சாத்தியமில்லை.

2023 நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும். ஆயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தும், ஆதரிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை. அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...