FB IMG 1641708579692 1
செய்திகள்இலங்கை

யாழ் – கொழும்பு இடையே புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

Share

கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவைக்கான புதிய தொடரூந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணத்தைத் தொடர்ந்தது.

காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு மீண்டும் தனது சேவையை ஆரம்பித்த குறித்த தொடரூந்து சேவை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்து கொழும்பை இரவு 8 மணிக்கு சென்றடையும்.

இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட இந்த நகர்சேர் கடுகதி சேவை தற்போது மேலதிகமாக 3 பெட்டிகளை இணைத்து 8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் எண்ணிக்கை 360ஆக அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது முதலாவது சேவையில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதேச போக்குவரத்து அதிகாரியை யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் வரவேற்றார்.

FB IMG 1641708575412 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...

17 10
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மோசடி: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ஒருவரின் வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, 6...

16 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பராமரிப்பு நிலையத்தில் சோகம்: குளத்தில் விழுந்து 18 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மெதமுலன, கதமடித்த பகுதியில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில், 18 மாதக் குழந்தை ஒன்று...

15 10
செய்திகள்இலங்கைஉலகம்

போலி காணொளிகளைத் தடுக்க புதிய கருவி: யூடியூப்பின் அதிரடி நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான காணொளிகள் மற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfakes) தொடர்பான...