உலகம்
எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: இராஜினாமா செய்தது அரசு (வீடியோ)
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்தமையின் எதிரொலியால் கஜகஸ்தான் அரசு இராஜினாமா செய்துள்ளது.
கடந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன.
கலவரங்கள் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிதமையால் அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இருப்பினும் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் கையெறி குண்டுகளையும் வீசினர்.
இந்நிலையில், இன்று Almaty மற்றும் Mangistau ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யபடுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும், 14 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தான் அரசின் இராஜினாமாவை ஏற்ற ஜனாதிபதி, துணைப் பிரதமரான, Alikhan Smailov என்பவரை நாட்டின் இடைக்கால பிரதமராக நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#WorldNews
You must be logged in to post a comment Login