Corona
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பூஸ்டர் தடுப்பூசி குறித்து ஆர்வம் காட்டாத மக்கள்!

Share

இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் 14.135 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து டிசம்பரில் 1381 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

ஜனவரி 4 வரை 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

கொரோனா இறப்புகளைப் பொறுத்தவரை கடந்த வருடம் செப்டம்பரில் 386 இறப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை படிப்படியாக குறைவடைந்து டிசம்பரில் 41 உயிரிழப்புகள் பதிவானது.

இந்த வருடத்தில் இதுவரை 3 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசியைப் பொறுத்தவரை, வட மாகாணத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியை 90 வீதமானவர்களும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 80 வீதமானவர்களும் பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை 30 வயதுக்கு மேல் 25 வீதமானவர்கள் பெற்றுள்ளனர்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...