Celestine
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பனை அபிவிருத்தி சபையில் பல மில்லியன் ரூபா நிதி ஊழல் மோசடி!

Share

பனை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸ்ரீன் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்தார்.

இன்று (05) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு எதிராக பொது அவரது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தான் வழக்கினை பதிவு செய்துள்ளதாகவும் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து சபையின் தலைவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காததன் காரணமாக திகதியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகளை மேற்கொண்டுள்ளார்.

அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண காரியாலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி மிரட்டி அலுமாரியினை உடைத்து தலைவருக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தையும் கொழும்பிற்கு எடுத்துச்சென்று அழித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் சொத்துக்களை தனியொருவர் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது.

பொதுநபராக தான் இதற்கு வழக்கு தொடுத்துள்ளதாகவும் இந்த வழக்கின் மூலம் அவரது ஊழல்கள் அம்பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு பயன்படுத்தி சபைக்கு பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஏன் மௌனம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பனைஅபிவிருத்திச் சபையின் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டி கொடுக்க முடியும்.

ஆனால் தற்போதுள்ள தலைவர் போன்றவர்களின் ஊழல் நடவடிக்கையின் காரணமாக பனை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் மிகவும் பூச்சிய நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும் என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...