Protest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பகிஸ்கரிப்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்கள்!

Share

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று (04) காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இணுவில் ஆரம்பப் பாடசாலை முன்பாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் அனுமதி பெறாது நடைபாதையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவரை, நேற்று அங்கிருந்து அப்புறப்படுத்த முற்பட்டனர்.

Protest 03

குறித்த வியாபாரியால் வருமானவரி பரிசோதகர், சுகாதார பரிசோதகர் அச்சுறுத்தப்பட்டதோடு, பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தவிசாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் குறித்த பகுதியில் இன்றும் தொடர்ந்து வியாபாரம் நடைபெறுவதாக தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest 02

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிசார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

அதேவேளை குறித்த பகுதியில் வியாபாரம் இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்ஷன் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...