Arrested 611631070
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காங்கேசன்துறையில் விக்கிரகங்கள் திருட்டு! – இராணுவ சிப்பாய் கைது

Share

இந்து கோவில்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உயர் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் இந்து ஆலயங்களில் காணப்பட்ட இந்து ஆலயங்களிலே விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதி இந்து கோவில்களில் உள்ள விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன. அத்துடன் திருடப்பட்ட விக்கிரகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ஒருவரை (வயது-34) முதலில் கைது செய்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கொழும்புக்கு விரைந்த உப பொலிஸ் குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20க்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர். அந்த விக்கிரகங்களை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட விக்கிரகங்களில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் காணப்படும் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இராணுவச் சிப்பாய் ஒருவர் (வயது-42) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...