Connect with us

ஜோதிடம்

இந்த 4 ராசிக்காரர்களும் அவதானத்தோடு செயற்படவேண்டும்!

Published

on

Astrology.jpg

2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. இந்த 4 ராசிக்காரர்களும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டுமெனக் கூறப்படுகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பலன் குதூகலத்தை தரும். இந்த மாதத்தில் ஒன்பதில் குரு இருப்பதால் பாக்கியங்கள் அதிகரிக்கும்.

பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வேலை மாற்றம் இப்போதைக்கு வேண்டாம்.

இருக்கிற வேலையை தக்கவைத்துக்கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திருமண வரன் பார்ப்பதில் நேரம் சுமாராக இருப்பதால் அவசரப்படாமல் நிதானமாக கடைபிடிக்கவும்.

கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் புதிய முயற்சிகளுக்கு அதற்கேற்ப வெற்றிகள் கிடைக்கும்.

அதே நேரத்தில் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் வரலாம். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

பொது இடங்களிலோ வீட்டிலோ வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

தேவையற்ற பேச்சுக்களை பேச வேண்டாம் வேலை செய்யும் இடத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடும். எந்த விடயத்திலும் விழிப்புணர்வு அவசியம்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்கள் முக்கிய முடிவுகள் இப்போதைக்கு எடுக்க வேண்டாம்.

எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். அனுமனை வழிபட அற்புதங்கள் நடைபெறும்

கடகம்

வேலையில் மாற்றம் வேண்டாம். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு இது சரியான மாதமல்ல.

இருக்கும் வேலையில் கவனம் தேவை. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

கண்டச்சனி காலம் என்பதால் பொறுமை அவசியம். திருமணத்திற்காக வரன் பார்க்க இது சரியான மாதமல்ல. காதல் விவகாரங்கள் சிக்கலை உண்டு பண்ணும். சண்டை சச்சரவுகள் வந்து பிரிவுகளை ஏற்படுத்தலாம்.

வாகனம், வீடு, வாங்குவதில் பொறுமை தேவை. அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பெண்களுக்கு மன அழுத்தம் உடல் நல பாதிப்பு வரலாம் கவனம் தேவை.

பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்த்து விடவும் யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க வேண்டாம்.

சுபகாரியங்கள் நடைபெறுவதில் அதிக தடை ஏற்படலாம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் குருவின் பார்வையில் இருக்கும் உங்களுக்கு வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

பண நெருக்கடிகள் நீங்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். திருமண சுப காரிய முயற்சிகள் கை கூடி வரும்.

தை மாதத்தில் சுப காரியம் தொடர்பாக பேசலாம். குழந்தை பாக்கியத்திற்காக தவமிருப்பவர்களுக்கு வரம் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது.

புதிய வாய்ப்புகள் கை கூடி வரும். பெண்களுக்கு நல்ல மாதம்.

அலுவலகத்திலும், வேலை செய்யும் இடத்திலும் குடும்பத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்களில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் வேலைப்பளுவினால் சில பாதிப்புகள் வரலாம்.

சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். மொத்தத்தில் இந்த ஜனவரி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மரை வழிபட வெற்றிகள் தேடி வரும்.

கன்னி

ஜனவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு நற்காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கை கூடி வரும். குருவின் பயணம் ஆறாம் வீட்டில் இருந்தாலும் சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.

ராசி நாதன் புதன் சனியோடு இணைந்திருப்பதால் வேலையில் புதிய மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். சுக்கிரன் நான்காம் வீட்டில் செவ்வாயுடன் இணையப்போவதால் இந்த மாதம் திருமண சுப காரியங்களைப் பேசினாலும் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சொத்து, வீடு, வாகனம் வாங்குவதற்கு இது ஏற்ற காலமல்ல. குழந்தை பாக்கியத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பத்தாம் வீட்டின் மீது சுக்கிரன் பார்வை விழுதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.

நோய்கள் வெளிப்படும் காலமாக உள்ளது. கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிக்கவும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.

ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு மாற்றங்களும் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகளும் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது. பெருமாள் கோவிலுக்கு சென்று தவறாமல் வழிபட நன்மைகள் நடைபெறும்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி 5, சனிக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம்...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...