Connect with us

கட்டுரை

‘வலி சுமந்த வருடமும், புத்தாண்டு வருகையும்’

Published

on

வலிகளை அள்ளித் தந்த ஆண்டாகவே 2021 எம்மிலிருந்து விடைபெறுகின்றது. அதன் தாக்கம் புத்தாண்டிலும் எதிரொலிக்கவே செய்யும்.  ஆக – ஏதோவொரு அச்ச உணர்வுடனேயே 2022 இல் காலடி வைக்கின்றோம்.

கொரோனா என்ற கொடிய அரக்கன் 2020 இல்தான் இலங்கைக்குள்ளும் கால் பதித்தான். தனது கோர  முகத்தைக்காட்டி – தாண்டவமாடினான். பாதிப்புகளும் வேகமெடுக்க ஆரம்பித்தான். இதனால் சுமார் இரண்டு மாதங்கள்வரை நாடு முற்றாக முடங்கியது. மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

பொது முடக்கத்தின் பின்னர் இயல்பு நிலை திரும்புமென நம்பினோம்.  ஆனால் அந்த நம்பிக்கை தவிடுபொடியானது. 2020 நிறைவடையும்வரை வலிகளும், வேதனைகளும் மக்களை துரத்தின. சுற்றுலாத்துறை வீழ்ச்சி, வேலையிழப்புகள், வியாபார நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் என ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை பட்டியலிடலாம்.

பொது முடக்கம், விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் 2020 இலேயே மனம் நொந்துபோயிருந்த இலங்கை வாழ் மக்கள், 2021 ஆம் ஆண்டிலாவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையுடனேயே புத்தாண்டில் கால் வைத்தனர். ஆனால் 2021 சிறப்பாக – தரமாக எம்மை வைத்து செய்துவிட்டது என்றே கூறவேண்டும்.

2020 இல் ஏற்பட்ட பிரச்சினைகள், நெருக்கடிகள் அசுர வேகமெடுத்து 2021 இல் தாண்டவமாடின. இதனால் உயிரிழப்புகள் மட்டுமல்ல ஏராளமான இழப்புகள் அணிவகுத்து நின்றன.

முறையற்ற பொருளாதாரக் கொள்கை, ஊழல் மோசடிகள் மற்றும் தவறான அரசக் கொள்கைகள், கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருந்த இலங்கை அரசுக்கு, கொரோனாவும் பேரிடியாக அமைந்தது.

வருமான வழிமுறைகள் முடங்கின. அந்நிய செலாவணி உட்பாய்ச்சல் வெகுவாக குறைந்தது. போதா குறைக்கு உலக சந்தையிலும் எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டன. இதனால் இலங்கையில் தொடர்ச்சியாக விலை உயர்வுகள் இடம்பெற்றன. மக்கள் நித்திரைக்கு சென்று காலை எழும்பும்போது ஏதாவது ஒரு பொருளின் விலை அதிகரித்திருக்கும் என்ற நிலைமையே காணப்பட்டது.

பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதனால் மக்களுக்கு பல நாட்களை வரிசையில் கடக்க வேண்டிய பேரவலமும் ஏற்பட்டது.  வாழ்க்கைச்சுமையும் உச்சம் தொட்டது.  குறிப்பாக சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களானவை ஒட்டு மொத்த மக்களையும் நிலை குலைய வைத்தது.  இப்படி 2021 தந்த வலிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதன் தாக்கம் 2022 இல் பயங்கரமாக இருக்கும் என்பது ஒருபுறம் – மறுபுறத்தில் பஞ்சம் குறித்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அச்சமும், பீதியும் மக்களை சூழவே 2022 பிறக்கின்றது.

பல வீடுகளில் பால் பொங்குவதற்குகூட இம்முறை வழியில்லை.  மேலும் சில வீடுகளில் பல நாட்கள் அடுப்பே எரியவில்லை.  இதனால் ‘இனிய புத்தாண்டு வாழ்த்து’ என வாய்விட்டு – வாழ்த்துகளை பறிமாற முடியாத நிலை.

இரசாயன உரத்துக்கு தடை விதித்துவிட்டு, சேதன பசளை முறைமைக்கு செல்வதற்கான தீர்மானத்தை கோட்டா அரசு அவசர அவசரமாக எடுத்தது. அதேபோல இறக்குமதிகளுக்குகூட பல கட்டுப்பாடுகள்.  இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட போதுமானளவு கையிருப்பு இல்லை. இதனால்தான் 2022 இல் பஞ்சம் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது, மக்களை பட்டினி கிடக்க விடமாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மறுபுறத்தில் அந்திய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடன்மூலமே அந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதனை தற்காலிக தீர்வாகவே கருதமுடியும். ஆக அந்நிய செலாவணி கையிருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான நீண்ட கால திட்டங்கள் இன்மையும் எம்மை பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது .

அதேவேளை, அரசியல் ரீதியில் 2022 இல் சில மாற்றங்கள் நிகழவுள்ளன.

2022 ஆரம்பத்திலேயே அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அரச நிர்வாகக் கட்டமைப்பு மாற்றப்படவுள்ளது.  புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது, அரசின் கொள்கைத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார்.  2022 இல் அரசின் பயணம் எவ்வாறு அமையும் என்பதை அதன் ஊடாக அவர் தெளிவுபடுத்துவார்.

2022 இல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என ஆளுந்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சாத்தியப்படுமா என்ற சந்தேகமும் எழுகின்றது.   உள்ளாட்சிசபைத் தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படும். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவமே சந்தேகமே.

சிலவேளை, மருத்து காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் இருந்து பிரதமர் மஹிந்த ஓய்வுபெற்றால், அரசிலிருந்து வெளியேறுவதற்கு பலர் தயார் நிலையில் உள்ளனர். மறுபுறத்தில் ஜே.வி.பியும் பலமானதொரு கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

தமிழர் தரப்பு அரசியலை பொருத்தமட்டில் – தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வை நோக்கி காய் நகர்த்தல்கள் இடம்பெறவில்லை. மாறாக 13 ஐ மையப்படுத்திய பயணமே ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது, ஒற்றையாட்சிக்குள் – 13 ஐ முழுமையாக அமுல்படுத்திக்கொள்வதாகவே உள்ளது. அதிலும் ஆயிரம் குழறுபடிகள். எனவே, 2022 இல் ஆவது –  காத்திரமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்திய பிரதமருக்கு அனுப்படும் கூட்டு ஆவணமானது – தமிழ் மக்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் விதத்தில் அமையக்கூடாது என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும்.

மலையகத் தமிழர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள். குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுபவர்கள் 2021 இல் திட்டமிட்ட அடிப்படையில் வஞ்சிக்கப்பட்டனர். தோட்ட நிர்வாகங்களால் பழிவாங்கப்பட்டனர். எனவே, அவர்களின் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, அவர்களுக்கு முறையான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு மலையக தொழிற்சங்கங்கள் 2022 இல் உறுதிபூண வேண்டும்.

அதேவேளை, இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் – இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி முன்னேறியவர்களும் இருக்கின்றனர். எனவே, துவண்டுவிடவேண்டாம்.  ஏதோவொரு விதத்தில் வழி பிறக்கும் – வலி நீங்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் காலடி வைப்போம்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்11 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...