வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் 17 போலி பி.சி.ஆர் அறிக்கைகளும், ஒரு கணினியும், 5 தொலைபேசிகள் மற்றும் சேமிப்பகம் ஆகியன அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் இரத்தொலுவ பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment