Sugas
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர் அதிரடியாக நீக்கம்!

Share

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியும், சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான காரைநகர் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட கட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து விலக்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இன்று இடம்பெற்ற காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தவர்.

அத்துடன் வரவு-செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகும் இம்முறை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...