நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாக காணப்படும் நிலையிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் கவலைக்குரியது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன் தலைவர் உபுல் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் விதிமுறைகள், அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட தீர்மானமா என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்,
தனிமைப்படுத்தல் சட்டங்கள் தளர்த்தப்படுவதாலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பொறுப்பற்ற நடத்தையாலும் நாடு மேலும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
#SriLankaNews
Leave a comment