Vaccine
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பூஸ்டர் டோஸை செலுத்திய சில மணி நேரத்தில் உயிரிழப்பு

Share

வவுனியாவில் கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா – காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். இருப்பினும் குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

குறித்த நபர் மகாறம்பைக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று நடத்தப்பட்ட பூஸ்டர் டோஸ் வழங்கும் முகாமில் தடுப்பூசியைப் பெற்றார்.

மேலும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப்பெற்ற பின்னர் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து விட்டு துவிச்சக்கரவண்டியில் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீடுதிரும்பிய அவர் சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உடலை உறவினர்கள் உடனடியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஏற்கனவே, அவர் சில நோய்களுக்கு உள்ளாகியிருந்தார் என கூறப்படுகின்றது. அவரின் உடலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...