நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய
அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரிய வலியுறுத்தியுள்ளார்.
விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து நாட்டை முடக்கினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புஞ்சிபொரளையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இன்னமும் எத்தனை சடலங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை பற்றிய பொய்யான தகவல்களை வழங்கி, புள்ளிவிவரங்களில் மோசடி செய்யும் அரசாங்கம், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மெய்யான கரிசை காட்டுமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a comment