Senthil thondaman
இலங்கைஅரசியல்செய்திகள்

எரிவாயு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தை வழங்குக!

Share

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்பதுடன், எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக கடந்த ஒரு மாதகாலமாக பதிவாகும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் அச்சத்துடன் சமையலை மேற்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்கள் உணவுகள் இல்லாமலும் தவித்துள்ளன.

இலங்கை என்பது ஒரு வெப்பமண்டல நாடாகும். வெப்ப சமநிலையை பேணும் வகையில்தான் எரிவாயு உற்பத்திகள் இதுவரைகாலமும் இடம்பெற்றுவந்தன. குறிப்பாக சிலிண்டர்களில் திரவவாயுவின் கலவை 80 சதவீதமாக காணப்பட்டது.

திரவவாயு கலவை 80 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளமையால் தான் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

திரவவாயு சதவீதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், அவ்வாறு திரவவாயு மாற்றத்திற்கான அனுமதியை வழங்கியது யார்?.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்கப்பட வேண்டும். இதனால் ஓர் உயிர் ஏற்கனவே பறியோயுள்ளது.

ஆகவே, எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் லிட்ரோ கேஸ் நிறுவனம் உடனடியாக வழங்க வேண்டும்.

இதேவேளை, திரவவாயு மாற்றப்பட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...