பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும் – என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொன்சேகாவுக்கும், சரத் வீரசேகரவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் தொடர் சொற்போர் நீடித்துவருகின்ற நிலையில் , பீல்ட்மார்ஷல் பதவி இராணுவத்தின் உயர் பதவியாகும். மக்களுக்காக சேவையாற்றவேண்டும்.
நல்லாட்சி அரசு போர்க்குற்றம் தொடர்பில் படையினரை காட்டிக்கொடுத்தது. அப்போது பொன்சேகா மௌனம் காத்தார் எனவும் தெரிவித்தார்.
பொன்சேகா மற்றும் சரத் வீரசேகர ஆற்றிய உரைகளில் இருந்து பொருத்தமற்ற விடயங்களை நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment