போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளை சமூகத்துடன் இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வீரவிலை திறந்தவெளி சிறைச்சாலையின் பணிகளை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
போதைப்பொருளுக்கு அடிமையாகி தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிகள் விசேட புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டு சமூகமயப்படுத்தி, நாட்டிற்கு நல்ல பிரஜைகளாக மாற்றி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு சகல வசதிகளுடனும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.
தற்போதைய அரசாங்கம் போதைப் பொருளுக்கு அடிமையாகி சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருபவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கும் திட்டத்தை பலகோடி ரூபாக்களை செலவு செய்து செயற்படுத்தப்படுகின்றது என்றார்.
#SrilankaNews
Leave a comment