கொல மாஸாக வெளியாகி உள்ள புஷ்பா திரைப்படத்தில் டிரைலர் இணையத்தை தும்சம் செய்து வருகின்றன.
தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம்,இந்தி என 5 மொழிகளில் டிரைலர் வெளியானது வெளியான சிறிது நேரத்திலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இருபாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ந் தேதி வெளியாக உள்ளது.
டிசம்பர் 6ந் தேதி இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானது, வெளியான சிலமணி நேரங்களிலேயே 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலானது.
#cinema
Leave a comment