01 Do
செய்திகள்அரசியல்இலங்கை

முடிந்தால் சபைக்கு வாருங்கள்! – சஜித்துக்கு சவால்!!

Share

முடிந்தால் 06 ஆம் திகதி சபைக்கு வாருங்கள். எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்பேன் என    கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே  அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார். போஸ்டர்களை ஒட்டவும், பிரச்சாரம் செய்யவும் அவர் பெரும் தொகை நிதியை செலவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் அந்த நபர் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை காரணமின்றி செலவுசெய்துள்ளார்.

தற்புகழுக்காக எவரும் இவ்வளவு நிதியை செலவிடமாட்டார்கள். எனவே, இது பற்றி விசாரிப்பதற்கும் தெரிவுக்குழு அவசியம்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தொடர்பில் 6 ஆம் திகதி சபையில் விவாதம் நடக்கவுள்ளது. அன்றைய தினம் சபையில் இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். அப்போது இவற்றை அம்பலப்படுத்துவேன். ஆடையின்றி வெளியேற வேண்டிய நிலையே எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்படும் என தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...