262823619 306492264814641 4684395904463522264 n
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை இராணுவத்தினர் கொடூரமானவர்கள்- முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்!!

Share

இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானவர்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்  இடம்பெற்ற நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான இராணுவம் இருந்ததெனில் அது இலங்கையில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக இலங்கையில்  1984.12.02அன்று மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.

கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும், சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.

இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான் எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர்.

தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...