2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போதும் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (02.12.2022) நடைபெற்றது.
இதன்போது பாதீடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அவ்வேளையிலேயே பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பின்போது ஆதரவு வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்த சுதந்திரக்கட்சி டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும் இறுதி வாக்கெடுப்பின்போது அதற்கு எதிரான முடிவையே எடுக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment