சுற்றுலா விடுதியின் 05 வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை நுவரெலியாவில் உள்ள பிரதான சுற்றுலா ஹோட்டலின் (Green Araliya) 5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த ஹோட்டலில் முகாமையாளராக தொழில் புரிந்து வந்த கம்பளை தொலஸ்பாகே வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி எனத் தெரியவந்துள்ளது.
சுற்றுலா ஹோட்டலின் ஊழியர்கள் நேற்று இரவு விருந்தொன்றை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து விருந்தின் பின்னர், அதில் கலந்துக்கொண்ட ஊழியர்கள், முகாமையாளரை அழைத்துச் சென்று 5 வது மாடியில் உள்ள அவரது அறையில் விட்டுள்ளனர்.
இதற்குப்பின்னரே அவர் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment