சஜித் பிரேமதாச, தலைமைப்பதவிக்கு பொருத்தமற்றவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரியவை ரணில் களமிருக்க இருந்தார். ஆனால் அவ்வாறு செய்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் தனியாக போட்டியிடுவதாக மிரட்டினார்.
ரணிலால் முடியாது என்ற கருத்தை மங்களவே உருவாக்கினார். ரணிலால் என்ன முடியாது? அவரை நம்பிதான் தற்போது நாடு உள்ளது. தூரநோக்கு சிந்தனையுடைய தலைவரே ரணில் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
#SriLankaNews
Leave a comment