maxresdefault 2
செய்திகள்அரசியல்இலங்கை

கடந்த அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யபோகிறதா???

Share

நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

“நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துவந்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறேன். இந்த தவறை ஏற்றுகொள்கிறோம்.

நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? என வினா எழுப்பிய அவர், . இவ்வாறான நிலையில் கடந்த அரசாங்கம் செய்த தவறை விடுத்து மாகாணசபை தேர்தலை இந்த அரசாங்கம் நடத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...