உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார்.
இதற்காக இரு நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.
” நான் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்தபோது அரச உளவுப்பிரிவின் அறிக்கையொன்று கிடைத்தது. இது தொடர்பில் சிஐடி மற்றும் ரிஐடி பணிப்பாளர்களுடன் நான் கலந்துரையாடினேன்.
இதன்பிரகாரம் சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. நீதிமன்றத்தில் நீல பிடியாணை பெறப்பட்டிருந்தது.
ஆனால் 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியில் இருந்து நான் மாற்றப்பட்டேன். திடீரென நாமல் குமார என ஒருவர் வந்தார்.கொலை சூழ்ச்சி பற்றி கருத்து வெளியிட்டார். ரிஐடி பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாமல் குமார விவகாரத்துக்கு என்ன நடந்தது? சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டது ஏன்?
எனவே, இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்பது மக்களுக்கு தெரியும். அவர்கள்தான் இன்று எம்மீது கைநீட்டுகின்றனர்.” – ரஞ்சித் மத்தும பண்டார் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
1 Comment