செய்திகள்
அதிகரிக்கும் தக்காளிக்கான கேள்வி!
கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கன மழையின் பின் தக்காளிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.115க்கு விற்பனையாகிறது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி சராசரியாக 100 டன் மற்றும் அதற்கும் மேல் காய்கறிகள் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வாங்கிச் செல்வதால் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
தக்காளி விலை உயர்வு காரணமாக 2 தக்காளிகளை பேக்கிங் செய்து அதனை ரூ.18 என்று விலை நிர்ணயம் செய்து அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login