தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் - சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!
உலகம்செய்திகள்

தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் – சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!

Share

தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் – சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு! தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!!

தெற்கு லண்டன் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். தாக்குதலாளியின் உடலும் சூட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

FB IMG 1628839942291

நீண்ட துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தனது குடும்பத்தவர்களையும் எதிர்ப்பட்டவர்களையும் கண்டபடி
சுட்டுள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

பாரம் தூக்கும் வாகனம் ஒன்றின் சாரதி எனக் கூறப்படும் அந்த இளைஞன், முதலில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்தவர்களைச் சுட்டுவிட்டு வெளியே வந்து வழிப்போக்கர்களையும் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சிலர் அம்புலன்ஸ் ஹெலி மூலம் மீட்கப்பட்டனர். நேற்றிரவு பொலீஸார் சம்பவம் நடந்தபகுதியை மூடி தேடுதல்களை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று மறுத்துள்ள அதிகாரிகள்,பிரதேச மக்களை அமைதி பேணுமாறு கேட்டுள்ளனர்.

தனது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கின்ற உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் (Priti Patel), பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான சூட்டுச் சம்பவம் இதுவாகும்.

குமாரதாஸன்

பரிஸ்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...