அரசின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவே‚ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
மேலும், சாதாரணமாக தற்போது நாட்டில் ஒரு வீட்டை அமைக்க வேண்டுமாயின் ஒன்றரை லட்சமாவது தேவை. ஆனால் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 மில்லியன் ரூபாவில் ஒரு லட்சம் வீடுகளை அமைக்க வேண்டுமானால் ஒரு வீட்டுக்கு 5000 ரூபாவையே செலவிட முடியும்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில‚ பாதீட்டின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களே காணப்படுகின்றன. – என்றார்.
இதேவேளை‚ பாதீட்டு உரையின் போது பேசப்பட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான விடயத்தினை வலியுறுத்திய பொன்சேகா இன்று இலங்கையில் மக்கள் உணவு பாதுகாப்பை அனுபவித்துக்கொண்ருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment