1515638124 prison teen suspect suicide
செய்திகள்அரசியல்இலங்கை

தடுத்துவைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால் அரசே முழுபொறுப்பு!

Share

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால், அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (17) விவாதத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பனாமுரே பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இந்திக்க ஜயரத்ன தொடர்பில்  பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயங்களை முழுமையாக நம்ப முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

மதுஷாக இருக்கலாம், கொலைகாரராக இருக்கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர்கள் உயிரிழந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் .

இது தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டில் மீண்டுமொரு இந்திகவை உருவாக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு நீண்ட நாட்களாக அடிமையான இந்திக்க, அவரது மனைவி பிள்ளைகளை தொடர்ந்து தாக்கி வருவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 11ஆம் திகதி அவரது மகள், தந்தையான இந்திக தன்னை தடியால் தாக்கியதாக கூறி முறைப்பாடு பதிவு செய்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் அவரை தேடிவந்த நிலையில் நேற்றிரவு (16) 10.30 மணிக்கு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், அதிகாலை 3.30 மணிக்கு சிறையில் உள்ள கம்பியில் தனது சேர்ட்டை பயன்படுத்தி தூக்கிட்டுள்ளார்.  அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...