யாழ்ப்பாணத்தில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடாத்துவதற்கு, 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரியாலையில் வீடொன்றின் மீது கடந்த மாதம் 10 ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
அதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில், உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்யப்பட்டனர்.
குறித்த இரு இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவ்விடயங்கள் அம்பலமானதாக பொலிஸார் கூறியுள்ளார்.
#SrilankaNews
Leave a comment