அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் ஆஜராகி யிருந்தார்.
இரண்டாவது நாளாக இன்று முற்பகல் ஆஜரான அருட்தந்தையிடம் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ கருத்து வெளியிட்டார்.
அக் கருத்துச் சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அவரிடம் 7 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment