sajith 2
செய்திகள்அரசியல்இலங்கை

தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன்! – சஜித் சூளுரை

Share

” ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன்.” என்று சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு சூளுரைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பட்டினியால் வாடவேண்டிய நிலைமை இன்று நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய வரிசை யுகமும் உருவாகியுள்ளது. ஆனால் ‘கொமிஷ்’ மூலம் ஆட்சியை முன்னெடுக்க ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர்.

ஊழல், மோசடிகளுக்கு எமது ஆட்சியில் முற்றுபுள்ளி வைக்கப்படும். பெயர்களை பார்த்து பதவிகள் வழங்கப்படாது. திறமைக்கே முன்னுரிமையும், முதலிடமும் வழங்கப்படும். மக்கள் ஆட்சி ஊடாக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் யுகத்தை உருவாக்குவோம்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் போராட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இது எமது தாய் நாடு. இங்கு வாழ்பவர்கள் எமது மக்கள். எனவே, தாய் நாட்டை காக்க, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புத்தாட்சியை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...