hr d
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள அதிகாரிகள்.

Share

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வகையிலான, சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைகள் திணைக்களப் பிரதானிகள், பொலிஸ் மாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் வரும் 18ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விடயம் குறித்து மேலும் விளக்கிய சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறையான பொறிமுறையொன்றைச் செயற்படுத்த அரசாங்கம் தவறினால், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...