death body 1
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்.

Share

நேற்றைய தினம் இரவு, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த, சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலைக்கு வௌியில் இருந்து பொதியொன்று எறியப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியமையினால் பதற்றம் நிலவியதாக கூறப்படுகின்றது.

தற்போது, நேற்றைய தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் பாதாள உறுப்பினரின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் தடுப்புக்காவல் கைதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோதலில் படுகாயமடைந்த கைதி, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளைப் பொரளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...