oil price down
வணிகம்Featured

குறைவடைந்தது எண்ணெய் விலை.

Share

இன்று, கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளமையினால், மத்திய கிழக்கில் மோதலைக் குறைக்கக்கூடிய ஒரு தூதரகத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை அடுத்து மசகு எண்ணெய் விலையில் இந்த வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் இன்று அதிகாலை 5.77 சதவீதம் வீழ்ச்சி கண்டு 92.02 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதோடு, அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5.50 சதவீதம் வீழ்ச்சிகண்டு 84.40 அமெரிக்க டொலர்களாக பொதிவாகியுள்ளது.

மேலும், மேர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 10.12 சதவீதம் வீழ்ச்சியடைந்து 97.05 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
egg
வணிகம்

இன்று முதல் அதிகரிக்கிறது முட்டையின் விலை.

குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள்...

i phone
வணிகம்

உயர்ந்தது தொலைபேசியின் விலை.

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது. இதற்கு,...

oil price 14 1
வணிகம்

மேலும் அதிகரித்தது மசகு எண்ணெய் விலை.

மசகு எண்ணெய், சர்வதேச சந்தையில் மேலும் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், ப்ரெண்ட்...

gold price growth 1
வணிகம்

இன்றைய தினம் உயர்வினை பதிவு செய்தது தங்கத்தின் விலை.

இன்றைய தினம் இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக...