ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது.
இதற்கு, உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் பற்றாக்குறையே இந்த விலையேற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு, ஜப்பானைத் தொடர்ந்து விரைவில் பிற நாடுகளிலும் அமுலுக்கு வரலாம் என கூறப்படுகின்றது.