warning
உலகம்

லண்டனில் உள்ள தமிழர்களுக்கு எச்சரிக்கை.

Share

லண்டனில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.

லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அதனால், தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர்.

வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...

சூறாவளி 1
உலகம்

ஜப்பானை நோக்கி வேகமாக நகரும் சூறாவளி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது...

huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக,...