tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

Share

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகைகளை மேலும் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் அமெரிக்க ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இலங்கை மக்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரும் நிவாரணம் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தான் தூதுவர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு நாட்டிற்குத் திரும்பினாலும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூதுவர் பதவியில் மேலும் நீடிக்குமாறு அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தற்போதைய அரசாங்கத்துடன் தான் மிகவும் சுமுகமாகப் பணியாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...