ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

Share

 

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்கள் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவம், குறித்து நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், கருத்து வெளியிட்ட அவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல, அது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடு என்பதே உண்மையாகும்.

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும் எனவும்
இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது. நானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவேன்.
அதே போலவே நானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்தேன். மேலும்,சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை, இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என்பதை மறுக்க முடியாது.

இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், ‘நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்’ என்று தைரியமாக முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது.

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மனப்பான்மையினை பாராட்ட வேண்டும் குறை கூற கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...