india 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதுக்குடியிருப்பு புதையல் அகழ்வு விவகாரம்: சிஐடி சார்ஜன்ட் பணியிடை நீக்கம்

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீன ஸ்கேனர் (Scanner) இயந்திரத்தைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரின் பணி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸ் சேவையின் கடுமையான ஒழுக்கக் கோவையை மீறி, இத்தகைய சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டமைக்காகவே இவருக்கு எதிராக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில், கைவேலி இராணுவ முகாமிற்கு அருகில் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் முன்னெடுத்த விசேட வாகனச் சோதனையின் போது, சந்தேக நபர்கள் பயணித்த சொகுசு கார் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அதிநவீன ஸ்கேனர் உபகரணங்களுடன், குறித்த சிஐடி சார்ஜன்ட் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சிஐடி சார்ஜன்ட், தனது விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் (OIC) தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பணிக்குச் சமூகமளிக்க முடியாது எனப் போலித் தகவல் வழங்கி விடுமுறை பெற்றுள்ளார். இவ்வாறு பொய் கூறிவிட்டு, அவர் முல்லைத்தீவு பகுதியில் உள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடத்தில் புதையல் தோண்டுவதற்குக் குழுவாகச் சென்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரும், அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் அதிநவீன ஸ்கேனர் இயந்திரம் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொல்பொருள் சிதைப்பு மற்றும் சட்டவிரோத அகழ்வு முயற்சி குறித்து முல்லைத்தீவு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், துறைரீதியான மேலதிக விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....